ஒலிம்பிக் பேட்மிண்டன்:அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து – இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி ..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 7 நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி,நேற்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் 16 வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வெறும் 41 நிமிடங்களில் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் 2020 காலிறுதிப் போட்டிக்கு பிவி சிந்து தகுதி பெற்றார்.

இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை ,இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஒரு அற்புதமான ஆட்டத்தை பிவி சிந்து வெளிப்படுத்தினார்.இதனால்,காலிறுதி ஆட்டத்தின் இறுதியில் அகேன் யமாகுச்சியை 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதனால்,இந்தியாவுக்கு இன்று மற்றொரு பதக்கம் உறுதியானது.ஏனெனில்,காலை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின் 69 கிலோ எடைபிரிவில் சீன தைபேயின் சின்-சென் நியென்னை 4-1 என்ற கணக்கில் லவ்லினா தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று, ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.