4000 சார்ஜ் ஏற்றும் இடங்கள்.! கட்டணமில்லா சார்ஜ்.! அசத்தும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்.!

4000 சார்ஜ் ஏற்றும் இடங்கள்.! கட்டணமில்லா சார்ஜ்.! அசத்தும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்.!

ஓலா எலெக்ட்ரிக் பைக்குகளை சார்ஜ் செய்வதற்காக பிரத்யோகமாக இந்தியா முழுவதும் 4000 ஹைப்பர் சார்ஜ் ஏற்றும் இடங்கள் அமைக்கப்பட உள்ளதாம். அங்கு அடுத்த ஆண்டு ஜூலை வரையில் கட்டமில்லாமல் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாமாம்.

ஓலா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி அதனை தற்போது முன்பதிவு செய்தவர்களுக்கு வாகனங்களை டெலிவரி செய்யும் வேளைகளில் ஓலா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தற்போது விற்பனையை அதிகப்படுத்த ஹைப்பர்சார்ஜிங் பாய்ண்ட்களை இந்தியா முழுவதும் அமைக்க உள்ளதாம் அந்நிறுவனம். இதனை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது, 2022 வருட இறுதிக்குள் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் 4000 ஹைப்பர்சார்ஜிங் இடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், இந்த சார்ஜிங் பாய்ண்ட்களில் 2022 ஜூலை மாதம் வரையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாமாம்.

இதற்காக பாரத் பெட்ரோலியம் பங்குகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஹைப்பர்சார்ஜிங் இடம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்த ஹைப்பர்சார்ஜிங் பாய்ண்ட்களில் 18 நிமிடத்தில் 0 சதவீதத்தில் இருந்து 50 சதவீத சார்ஜ் ஏறிவிடும் திறன் கொண்டதாக இருக்குமாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube