murungaikeerai

அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! முருங்கை கீரையை வைத்து இப்படி ஒரு ரெசிபி செய்யலாமா…?

By

நம்மில் அனைவருக்குமே முருங்கை கீரையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கீரையில் இரும்புசத்து, வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், முருங்கை கீரையை வைத்து பொடி செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • முருங்கை கீரை – 1 கப்
  • உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
  • கடலை பருப்பு – 1 ஸ்பூன்
  • துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 10
  • பூண்டு (தோலுடன்) – 10 பல்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • புளி – எலுமிச்சை அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் முருங்கை கீரையை தீயில் வாட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை வருது எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் சற்று எண்ணெய் ஊற்றி புளி மற்றும் சிறுதுண்டு பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை சூடான சோறுடன் ஒரு கரண்டி மற்றும் முருங்கை கீரை பொடியை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு வைத்து தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.