எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விக்ரம்.! படத்தில் இணைந்த நடிகர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விக்ரம்.! படத்தில் இணைந்த நடிகர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விக்ரம் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 16- ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், விக்ரம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் ஜெயராம் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. காளிதாஸ் ஜெயராம், தமிழில் மீன் குழம்பும் மண் பானையும், புத்தம் புது காலை, ஒரு பக்க கதை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த திரைபடத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube