, ,

ரூ.6,500 வரை ஆஃபர், ஜியோ ஃபைபரின் தீபாவளி டபுள் போனான்சா.!

By

ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபரின் தீபாவளி ஆஃபரை  அறிவித்துள்ளது. ரூ.6500 வரை பலன்களை வழங்கவுள்ளது.

   
   

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஜியோஃபைபர் டபுள் ஃபெஸ்டிவல் போனான்ஸாவை அறிவித்துள்ளது. இதன் படி, அக்டோபர் 18 முதல் அக்டோபர் 28 வரை ஜியோஃபைபர் இணைப்புகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ₹6,500 மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது.

புதிய ஜியோ ஃபைபர் இணைப்பை 6 மாதங்களுக்கான ₹599 திட்டம் அல்லது ₹899 திட்டத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும். மேலும் இந்த இரண்டு கூடுதல் பலன்களுக்கும் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி உடன் செல்லுபடியாகும்.

599 X 6 மாதம் திட்டம்:  ஜியோஃபைபர் ₹599 திட்டம் 30Mbps இன் இணைய வேகத்துடன் 550 க்கும் மேற்பட்ட சேனல்களையும் 14+ OTT ஆப்ஸ் களையும்  வழங்குகிறது. 6 மாத காலத்திற்கு (ரூ. 3,594 + ரூ. 647 ஜிஎஸ்டி) ரூ.4,241 செலுத்தினால், இந்தத் திட்டத்தில் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.4,500 மதிப்புள்ள பலன்களைப் (வவுச்சர்களை) பெறுவார்கள்.

 • ரூ.1,000 மதிப்புள்ள அஜியோ(AJIO)
 • ரூ.1,000 மதிப்புள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல்
 • ரூ.1,000 மதிப்புள்ள நெட் மெட்ஸ்
 • ரூ.1,500 மதிப்புள்ள இக்ஸிகோ  மற்றும் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.

899 X 6 மாதம் திட்டம்:  ஜியோ ஃபைபர் ₹899 திட்டம் 100Mbps இன் இணைய வேகத்துடன் 550 க்கும் மேற்பட்ட சேனல்களையும் 14+ OTT ஆப்ஸ் களையும்  வழங்குகிறது. 6 மாத காலத்திற்கு (ரூ. 5,394 + ரூ. 971 ஜிஎஸ்டி) ரூ.6,365 செலுத்தினால், இந்தத் திட்டத்தில் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.6,500 மதிப்புள்ள பலன்களைப் (வவுச்சர்களை) பெறுவார்கள்.

 • ரூ.2,000 மதிப்புள்ள அஜியோ(AJIO)
 • ரூ.1,000 மதிப்புள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல்
 • ரூ.500 மதிப்புள்ள நெட் மெட்ஸ்
 • ரூ.3,000 மதிப்புள்ள இக்ஸிகோ  மற்றும் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.

899 X 3 மாதம் திட்டம்:  ஜியோ ஃபைபர் இணைப்பை 3 மாத காலத்திற்கு (ரூ.3,182 + ₹485 ஜிஎஸ்டி) ரூ.2,697க்கு ரீசார்ஜ் செய்தால், புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறுவார்கள்.

 • ரூ.1,000 மதிப்புள்ள அஜியோ(AJIO)
 • ரூ.500 மதிப்புள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல்
 • ரூ.500 மதிப்புள்ள நெட் மெட்ஸ்
 • ரூ.1,500 மதிப்புள்ள இக்ஸிகோ, 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி ஆஃபர் இந்த திட்டத்திற்கு செல்லுபடியாகாது.

மேலும், மேற்கூறிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி ரூ.6,000 மதிப்புள்ள 4K ஜியோ ஃபைபர் செட் டாப் பாக்ஸைப் பெறுவார்கள்.

Dinasuvadu Media @2023