கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒடிசா மாநில அரசு தயாராக உள்ளது – முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒடிசா அரசு முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒடிசா அரசு முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், மாநிலத்தில் தடுப்பூசி செயல்முறை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது, அதற்காக ஒடிசாவில் முழுமையான தரவுத்தளம் தயாரிக்கப்பட்டு, தடுப்பூசி செயல்முறையை சீராக நடத்துவதற்கு ஒரு தளவாட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிட் -19 நெருக்கடியால் ஏற்படும் பொருளாதார சவால்களை சமாளிக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துளளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.