மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு..! பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட முடிவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட முடிவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நடப்பு ஆண்டிலேயே 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.