NZvPAK

NZvPAK : நியூசிலாந்தின் அதிரடி… பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு!

By

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரி இன்றைய 35ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகிறது. அரையிறுதி ரேஸில் நீடிக்க வேண்டும் என்றால், இந்த போட்டியில் வெற்றி மிக அவசியம். இதனால், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.

   
   

அந்தவகையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 35 ரன்களுக்கு தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே விக்கெட்டை இழந்தாலும், ரச்சின் ரவீந்திரன் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானம் மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

உலக கோப்பையில் நான் இல்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! ஹர்திக் பாண்டியா உருக்கம்.!

சிறப்பாக விளையாடி வந்த இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து, தங்களது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். இதன்பின், இருவரும் சதங்களை நோக்கி விளையாடி வந்த நிலையில், இதில் ரச்சின் ரவீந்திரன் தனது சதத்தை அடித்து 94 பந்துகளில் 108 ரன்கள் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் கேன் வில்லியம்சன் 79 பந்துகளில் 95 ரன்கள் அடித்து இருந்த நிலையில், சதத்தை தவறவிட்டார்.

இதனைத்தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 29, மார்க் சாப்மேன் 39, க்ளென் பிலிப்ஸ் 41, மிட்செல் சான்ட்னர் 26 ரன்கள் அடித்து அணிக்கு ரன்களை குவித்தனர். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது நியூசிலாந்து. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.

Dinasuvadu Media @2023