100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டியது கட்டாயம் -ராகுல் காந்தி

100 நாள் வேலை திட்டத்தில் ஏழைகளுக்கு வேலை வழங்க வேண்டியது கட்டாயம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவதாக அறிவித்தது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் இருந்து பலர் வெளியை இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், 100 நாள் வேலை திட்டத்தில் ஏழைகளுக்கு வேலை வழங்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச வருவாய் அளிக்கும் NYAY திட்டத்தில் வேலை வழங்கினால் இந்திய பொருளாதாரமும் உயரும். சூட்-பூட்-கொள்ளை அரசாங்கம் ஏழைகளின் வலியை புரிந்து கொள்ளுமா? என்று பதிவிட்டுள்ளார்.