அதிர்ச்சி: கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 நாட்களில் உயிரிழந்த செவிலியர்!

அதிர்ச்சி: கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 நாட்களில் உயிரிழந்த செவிலியர்!

போர்ச்சுக்கல் நாட்டில் பயோன்டெக் – ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட செவிலியர் உயிரிழந்தார்.

உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து, தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கொரோனா தடுப்பு மருந்தான ஃபைசர், 95 சதவீதம் கொரோனாக்கு எதிராக செயல்படுவதால், ஃபைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது. அதனைதொடர்ந்து, பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்பொழுது போர்ச்சுக்கல் நாட்டில் பயோன்டெக் – ஃபைசர் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சோனியா ஆக்வெடோ என்ற 41 வயது செவிலியர், இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். ஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் 2 நாட்களில் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Join our channel google news Youtube