நுரையீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வழிகள்….!!!

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இப்பழக்கம் மிக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட முடியாமல் சீக்கிரத்தில் இவ்வுலகை விட்டு சென்றுவிடுகின்றனர். புகை பிடிக்கும் பழக்கம் வெகு விரைவாக நுரையீரலை தாக்குகிறது. இதன் மேல் படலம் மிக மென்மையான படலம் என்பதால் வெகு விரைவில் இப்படலம் தாக்கப்படுகிறது.

எந்த சூழ்நிலையிலும் நுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது என சில முறைகள் உள்ளது. அவற்றை கடைபிடித்தால் நுரையீரல் பாதிப்பிலிருந்து தப்பலாம்.

  • தினமும் கார்டியோ பயிற்சி செய்து வந்தால் இதயத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கும். எனவே இது தானாகவே நுரையீரலை சீராக்கி விடும்.
  • மலை ஏறுதல் பயிற்சி மேற்கொள்வது நல்லது, ஏனென்றால் நுரையீரலின் செயல்திறனை செம்மைப்படுத்துவதில் இப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
  • கிவி பழம் சாப்பிடுவது நுரையீரல் சுத்திகரிப்பிக்கு மிக நல்லது என மருத்துவர்கள் கூவுகின்றனர்.
  • நீச்சல் பயிற்சி மேற்கொண்டால் நுரையீரல் சார்ந்த எந்த பிரச்சனையும் வராது.
  • சுவாச இசைக்க கருவிகள் வாசிப்பதில் மூலம் நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுகிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment