அமித் ஷா பேச்சால் என்.ஆர் காங்கிரஸ் அதிருப்தி..! பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடருமா..?

பாஜகவுடன் கூட்டணியைத் தொடருவதா..? வேண்டாமா..? என்பது குறித்து  கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இணைந்து தேர்தலை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலக என்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் என் ஆர் காங்கிரஸ்  அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்த பாஜக மேலிடம் முன்வராததால் என்.ஆர் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், தொடர்ந்து என்.ஆர் காங்கிரஸுடன் பேசி வருகிறோம். தற்போது வரை கூட்டணியில் தான் உள்ளோம். நாளை பாஜக மேலிடம் என்.ஆர் காங்கிரஸுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என கூறினார்.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியைத் தொடருவதா..? வேண்டாமா..? என்பது குறித்து என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கட்சி நிர்வாகிகளுடன் மாலையில் ஆலோசனை நடத்த உள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து என்.ஆர் காங்கிரஸ் விலகினால் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவதா..? அல்லது பாஜக கூட்டணியில் இடம் பெறுவதா..? என அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் என்.ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

author avatar
murugan