திமுக ஆட்சியின் போது தமிழக மக்களுக்கு எதும் செய்யப்படவில்லை – முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சியின் போது தமிழக மக்களுக்கு எதும் செய்யப்படவில்லை – முதல்வர் பழனிசாமி

மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளான இன்று உடுமலைபேட்டையில் மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றும் மக்களுக்கு எதும் செய்யவில்லை எனவும் முக ஸ்டாலின் குற்றசாட்டுகிறார் என்று முதல்வர் கூறியுள்ளார். அவர்கள் தெரிந்து பேசுகிறார்களா தெரியாமா பேசுகிறார்கள் என்று கூறிய முதல்வர், மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறிய முதல்வர், கனிமொழி எம்பி திருப்பூர் மாவட்டத்தில் போகும் இடமெல்லாம் தவறான பொய்யான செய்தியை பரப்பி வருகிறார் என குற்றசாட்டினார். ஒரு விவசாயி முதல்வராக இருக்கக்கூடியது அதிமுக அரசு என்றும் வேளாண்குடி சிறந்ததால் உணவு உற்பத்தி அதிகரிக்கும், அப்போதுதான் உணவிற்கு பஞ்சமில்லாமல் இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். ஆகையால், எங்கள் அரசு பல்வேறு உதவிகளை விவசாயிகளுக்கு செய்து வருகிறது,

மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. உழைக்கும் விவசாயிகள், மக்களுக்கான அரசு அதிமுக தான் என்று கூறியுள்ளார். பாஜக மத்தியில் ஆளுகிறது தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை என்பது ஒரு தவறான குற்றசாட்டு என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து திருப்பூரில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை, அதிமுக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்று மத்தியில் எடுத்து சொல்லி பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரே ஆண்டி 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்த வரலாற்று பெற்ற அரசு அதிமுக தான் என்றும் மக்களின் குறைகளை தெரிவிக்க 1100 என்ற எண்ணை அழைத்து அரசின் சேவையை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube