போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து விடும் – ஆசிரியர் சங்கத்தினர்

போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளில் எப்படி மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்? என TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி. 

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறுநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை நீக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து விடும்; உடனடியாக அரசு எங்கள் போராட்ட குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில் இது தொடர் போராட்டமாக மாற்றப்படும்.

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தான் கல்வித்தரம் கீழே சென்றுள்ளது; போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளில் எப்படி மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment