விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை! இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர்,  ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி இஸ்ரோ களம் இறங்கியது. மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையுடன் சேர்ந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும் இந்தப் பணியில் இறங்கியது. ஆனாலும், விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘ நிலவில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், ஆர்பிட்டர் பகுதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.’ என தெரிவித்தார்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

40 mins ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

52 mins ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

55 mins ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

2 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

2 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

2 hours ago