வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் திட்டவட்டம்.
நாளை அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து சென்னை பல்லவன் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக சங்க தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர். நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த நிலையில், தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.
இதன்பின் பேசிய போக்குவரத்து தொழிலாளர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் நடராஜன், வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் நடைபெறும் என அறிவித்துள்ளார். எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும் பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்துக்கு கழகம் அனுப்பிய நோட்டீஸுக்கு பயப்படமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் 95% தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் சுற்றறிக்கையை கண்டு நியாயத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் போக்குவரத்துக்கு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் இதுவரை எதுவும் பேசவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றசாட்டியுள்ளார்.