வடகிழக்கு பருவமழை : வடசென்னை பகுதியில் முதல்வர் ஆய்வு…!

வடகிழக்கு பருவமழை : வடசென்னை பகுதியில் முதல்வர் ஆய்வு…!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வடசென்னை பகுதியில் முதல்வர் ஆய்வு. 

அடுத்த மாத இறுதி வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் தென்சென்னை பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக வடசென்னை பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பிரிட்டானியா நகர், புழல் ஏரி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக சீரமைப்பு பணிகளை முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube