இன்றுடன் முடிகிறது வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் தமிழகம் உள்ளிட்ட இடங்களில் இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவடைவதாக கூறியுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் 2018-ல் இயல்பாய் விட 12 சதவீதம் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என கூறியிருந்தது. இந்நிலையில் இயல்பை விட இந்த ஆண்டு 24 சதவீதம் குறைவாக தான் வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும், சென்னையில் மேகம் வானம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தின் உட்பகுதியில் மூடுபனி நிலவும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment