வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் பூரண நலத்துடன் மீண்டு வர வேண்டும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் பூரண நலத்துடன் மீண்டு வர வேண்டும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்  முன்னதாக இவர் செய்து கொண்ட இருதய அறுவை சிகிச்சை காரணமாக, தற்போது  இவரது உடல்நிலை மிகவும் மோசமான  நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபரான ட்ரம்ப் அவர்கள், வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் பூரண நலத்துடன் மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில், வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் உடல்நலம் குறித்து வரும் செய்திகள் வருத்தமளிப்பதாகவும், அவருக்கும் தனக்கும் நல்ல உறவு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கிம்மின் உடல்நலம் குறித்து  நேரடியான தகவல்கள் எதுவும் வரவில்லை என்றும், உளவுத்துறை மூலம் வரும் தகவலின் நம்பகத்தன்மை குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.