தமிழ் சினிமாவிற்கே ஸ்ட்ரைக் : இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு !!??

ஒரு தமிழ் படத்தை எடுத்து அதனை எந்த வித பிரச்னையும் இல்லாமல் திரைக்கு கொண்டுவந்து ஓட வைப்பதற்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகின்றனர். இதில் இணையத்தில் படம் வெளியாகிவிட்டால் கூடுதல் சிக்கல். மேலும் கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தாலும் விளம்பரபடுத்தினால் தான் படமே மக்கள் கண்ணில் போய் சேர்க்கிறது.

இந்த நிலைமையில் தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் உள்ள விஷாலுக்கு இது பொல்லாத காலம். தற்போது கியூப் பிரச்சினையின் காரணமாக படபிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில பெரிய நடிகர்களின் படபிடிப்புகள் சத்தமில்லாமல் நடந்துதான் வருகிறது.

அதில் முதலில் நடப்பது நடிகர் விஜய் நடிக்கும் படம்தான். அந்த படத்தில் ஹைதராபாத்தில் இருந்து 2 ஸ்டண்ட் மாஸ்டர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தடுத்து படபிடிப்புகள் இருப்பதால் முருகதாஸ் பட படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

மேலும், நாடோடிகள் படப்பிடிப்பு வெளியூரில் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அந்த படத்தின் படபிடிப்பு நடக்கிறது. அதேபோன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற துல்கர் சல்மான் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுவதால் பாதியில் உடனே நிறுத்த முடியாது. இந்த காரணத்தால் அவர்களது படப்பிடிப்புகள் நடக்கிறதாம்.

இவர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் தங்களது பிரச்னைகளை எடுத்து கூறி அனுமதி வாங்கி படபிடிப்புகள் நடக்கிறது. என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment