நோக்கியா ஆன்ராய்டு போன்கள் அதிரடி விலை குறைப்பு!!

இந்தியாவில் நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 6.1 ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

Image result for nokia 6.1

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இரண்டு வகையில் வந்தது. இதன் ஆரம்ப விலை 16,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை 6,999 ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ள ஸ்மார்ட்போனின் விலை 10,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Image result for nokia 4.2 and 3.2

 

சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
திரை: 5.5 இன்ச் அளவு
பிக்சல்: 1080×920
பிராசசர்: 630 Soc
ரேம்: 3,4 ஜிபி
மெமரி: 32, 64ஜிபி
எக்ஸ்பேண்டபிள் மெமரி: 128ஜிபி
கேமரா: 16 மெகா பிக்சல்
சார்ஜர்: USB டைப் சி
பேட்டரி சக்தி: 3,000 mAh