நொய்டா சர்வதேச விமான நிலையம்: அடிக்கல் நாட்டிய பிரதமர்..!

நொய்டா சர்வதேச விமான நிலையம்: அடிக்கல் நாட்டிய பிரதமர்..!

நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா கௌதம் புத்த நகரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா ஆகியோர் கலந்துக் கொண்டனர். பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, நொய்டா சர்வதேச விமான நிலையம் ஒரு முக்கிய ஏற்றுமதி மையத்தை சர்வதேச சந்தைகளுடன் நேரடியாக இணைக்கும்.

இது இப்பகுதி விவசாயிகளுக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்ற அழிந்துபோகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவும். நொய்டா சர்வதேச விமான நிலையம் விமானங்களின் பழுது, பராமரிப்பு மற்றும் இயக்கத்தின் மிகப்பெரிய மையமாக இருக்கும். இங்குள்ள 40 ஏக்கர் பரப்பளவில் விமானங்களை பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

7 தசாப்த சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, உ.பி. இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் முயற்சியால் உ.பி., இன்று நாட்டின் மிக வேகமாக இணைக்கப்பட்ட பகுதியாக மாறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube