தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..!

தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க,நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை.

தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழில் வணக்கம் சொல்லி உரையாற்றினார்.

அந்த உரையில்,”தமிழகத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி  இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன வழங்க பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி,

  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
  • நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,
  • ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,
  • மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன்,
  • மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், உள்ளிட்ட 5 பேர் இக்குழுவில் இடம்பெறுவர்.

எனவே,இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்,மேலும்,பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்”,என்று கூறினார்.