கோவையில் வாக்கிங் செல்வதற்கு கூட அனுமதி இல்லையாம்!

கோவை மாவட்டத்தில் வாக்கிங்  செல்வதற்க்கும், உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்.  

கொரோனா வைரஸ் தாக்கம் கோவை மாவட்டத்திலும் அதிகம் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், முகக்கவசம் அணிய வேண்டும் தேவையில்லாமல் வெளியில் நடமாட கூடாது என்ற சில முறைகளும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது கோவை மாவட்டம் பந்தய சாலையில் தினமும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதாகவும், இதனால் சமூக இடைவெளி பின்பற்றப்படுவது இல்லை எனவும் சிலர் முகக்கவசம் கூட அணியாமல் நடைபயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் வந்த தகவலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இனி அந்த உடற்பயிற்சி மற்றும் நடைப் பயிற்சிகள் கூட இருக்கக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு. ராசாமணி  கூறியுள்ளார்.

author avatar
Rebekal