புதிய திருப்பம் : டார்ச் லைட் சின்னம் வேண்டாம் -எம் ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் கிடைக்காத நிலையில்,தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று எம் ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்தது.அதன்படி, தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு “டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கியது.ஆனால் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு “ டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.தமிழகத்திற்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், டார்ச் லைட் சின்னத்தை போராடி பெறுவோம் என்று  கமல் தெரிவித்தார்.எனவே கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட  நிலையில், பிரச்சார வாகனங்களில் இருந்து டார்ச் லைட் சின்னம் அகற்றப்பட்டது.

பின்பு  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  முறையீடு செய்யப்பட்டது.மேலும் பேட்டரி டார்ச்” சின்னத்தை தமக்கு ஒதுக்கும்படியும், எம்ஜிஆர் மக்கள் கட்சி “பேட்டரி டார்ச்” சின்னத்தை பயன்படுத்துவதைத் தடுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டி  மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் புதிய திருப்பமாக , எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கியது ஏற்புடையது அல்ல என்றும் மாற்று சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன் என்றும் எம் ஜி.ஆர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ம.நீ.மத்திற்கு பாண்டிச்சேரியில் டார்ச் லைட் ஒதுக்கியுள்ளதால். வெற்றி பெற கூடும் மாற்று சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன்.எம்ஜிஆரின் புகழ் டார்ச் லைட் மீது பட்டு புதுச்சேரியில் கமல்ஹாசன் வெற்றி பெற்று எம்ஜிஆர் மக்கள் கட்சி விடக்கூடும் என்பதால் தனக்கு டார்ச்லைட் வேண்டாம். 2021 சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்திற்கு பதில் எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதன் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இதனால் மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.