கடந்த 6 மாதமாக தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி

அரசு கோரும் நிவாரண தொகையை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி.

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாத காரணத்தால் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

இனியாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பே அனைத்து நீர்நிலைகளை தூர்வாரபட வேண்டும். கடந்த 6 மாதமாக தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. சேதங்கள் குறித்து மாநில அரசு உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.

மாநில அரசு கோரும் நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி சார்பாகவும், அதிமுக சார்பாகவும் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்