உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை – மத்திய அமைச்சகம் விளக்கம்!

உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை – மத்திய அமைச்சகம் விளக்கம்!

விவசாய நிலம் உட்பட எந்தஒரு இடத்திலும் உயர்மின் கோபுரம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என்று மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு  முடிவு செய்துள்ளது.

விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கோவை உட்பட பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை அடுத்து ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மற்றும் திருப்பூர் எம்.பி கே.சுப்புராயன் ஆகியோர் உயர் மின் கோபுரங்ள் அமைக்க மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகம் அனுமதி பெற வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி நடந்த மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது அதில், உயர் மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், உயர்மின் கோபுரம் அமைப்பதால் விளை நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும்  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube