எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யப்போவது இல்லை -சல்மான் கான் அதிரடி

  • பிரதமர் மோடி இளைஞர்களை  வாக்களிக்க  ஊக்குவிக்குமாறு சல்மான்கானை கேட்டுக்கொண்டார்.
  • “தேர்தலில்  போட்டியிடவில்லை மேலும் எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யப்போவதும்  இல்லை ” என சல்மான்கான் கூறியுள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் இந்தூரில் பிரசாரம் செய்ய நடிகர் சல்மான் கானுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தனர்.இந்தூர் தொகுதியில்  மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் 1989-ம் ஆண்டிலிருந்து வெற்றிப்பெற்று வருகிறார்.

சுமித்ரா மகாஜனை இந்தூர்  தொகுதி மக்கள் தங்களுடைய சகோதரி என அழைத்து வருகின்றனர். இந்தூர் நடிகர் சல்மான்கானின் சொந்த ஊராகும். அதனால் சல்மான்கானை பிரச்சாரத்திற்கு  காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

இந்நிலையில்  பிரதமர் மோடி இளைஞர்களை  வாக்களிக்க  ஊக்குவிக்குமாறு சல்மான்கானை கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த  சல்மான்கான் “நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோம் , வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும்” என கூறி இருந்தார்.
இந்நிலையில் பா.ஜ.க -விற்க்காக  சல்மான்கான் பிரச்சாரம் செய்ய போகிறார் போல  என்ற புரளி வெளியான நிலையில் , இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் “தேர்தலில் போட்டியிடவில்லை , எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யப் போவதும் இல்லை ” என சல்மான்கான் கூறியுள்ளார்.
author avatar
murugan

Leave a Comment