தடுப்பூசி விஷயத்தில் இந்தியா செய்தது போல் வேறு எந்த நாடும் செய்யமுடியவில்லை, சுந்தர் பிச்சை புகழாரம்; அனுராக் தாக்குர்.!

கொரோனா தடுப்பூசி விஷயத்தில் இந்தியாவைப் போல எந்த நாடும் செய்ய முடியவில்லை என சுந்தர் பிச்சை புகழ்ந்ததாக அனுராக் தாக்குர் கூறினார்.

சமீபத்தில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) சுந்தர் பிச்சை மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் இருவரும் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து பேசிய அனுராக் தாக்குர், இந்தியாவில் கொரோனா காலங்களில் ஏற்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி சுந்தர் பிச்சை புகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

சுந்தர் பிச்சை, தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து இது எனது கொரோனா தடுப்பூசி சான்றிதழ், நான் எங்கு சென்றாலும் இதனை எடுத்துச் செல்வதாகவும் கூறினார். ஆனால் இந்தியாவில் ஏழை மக்கள் கூட கொரோனா தடுப்பூசி சான்றிதழ் நகலை தங்களது மொபைல் போனில் வைத்திருக்கின்றனர்.

இந்தியா கொரோனா தடுப்பூசி விஷயத்தில் எடுத்த நடவடிக்கையைப் போல வேறு எந்த நாடுகளும் செய்ய முடியவில்லை என சுந்தர் பிச்சை மேலும் கூறியதாகவும், நாம் இதனை நினைத்து பெருமை கொள்ளவேண்டும் எனவும் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar