ஹர்சிம்ரத் கவுரை யாரும் நம்ப போவதில்லை- பஞ்சாப் முதல்வர்..!

ஹர்சிம்ரத் கவுரை யாரும் நம்ப போவதில்லை- பஞ்சாப் முதல்வர்..!

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையில் 3 வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டங்களுக்‍கு எதிரான  நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு பா.ஜ.க கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

விவசாயிகளுக்கு சகோதரியாகவும், மகளாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாக ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்தார். இந்நிலையில், ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா குறித்து  பேசிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் , வேளாண் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த போது ஹர்சிம்ரத் கவுர் அதை எதிர்க்கவில்லை.

தற்போது மசோதாவை எதிர்ப்பதாக கூறி வரும் அவரை யாரும் நம்ப போவதில்லை என கூறினார். இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் மற்றும் மத்திய அரசின் இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட வேண்டும்  என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube