இனி முகக்கவசம் அணிய அவசியமில்லை-இத்தாலி அறிவிப்பு..!

இனி முகக்கவசம் அணிய அவசியமில்லை-இத்தாலி அறிவிப்பு..!

கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்து வருவதன் காரணத்தால் இனி முகக்கவசம் அணிய அவசியமில்லை என்று இத்தாலி சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று இத்தாலி. தற்போதுவரை இத்தாலியில் 42,53,460 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது அந்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

இதன் காரணத்தால் இத்தாலியின் சுகாதார அமைச்சகம், ஜூன் 28 முதல் கொரோனா குறைந்துள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிக்கு இந்த தளர்வு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube