புதிய கட்சி பதிவுசெய்ய இனி 30 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை – தேர்தல் ஆணையம்

புதிய கட்சிகள் தொடங்க 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், அதனை 7 நாட்களாக குறைத்தது இந்திய தேர்தல் ஆணையம்.

புதிய கட்சியை பதிவு செய்ய 30 நாட்கள் தேவை என்ற அவகாசத்தை 7 நாட்களாக குறைத்தது இந்திய தேர்தல் ஆணையம். இந்த உத்தரவு தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பை வெளியிட கட்சிகள் இனி 30 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. கட்சி தொடங்குவது பற்றி நாளிதழில் விளம்பரம் அளித்து அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதற்கு 7 நாட்களில் அனுமதி பெறலாம் என குறிப்பிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்