ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை – கே.பாலகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த காலகட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு தனியார் அமைப்புகள்  ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வந்தது.

ஸ்டெர்லைட் ஆலை 

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியது. இதனையடுத்து. உச்ச நீதிமன்றம் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு ஆக்சன் தயாரிப்புக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது. மேலும் இந்த ஆக்சிஜன் தயாரிப்பை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

ஆக்சிஜன் உற்பத்தி 

கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த ஆலை மூலம் இதுவரை சுமார் 650 டன் மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பல மாநிலங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் 350 டன் வாயு நிலையிலான  ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

முடிவடையும் கால அவகாசம் 

 வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு  உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் 6 மாதங்கள் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டால் அனுமதி அளிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், பேரணியாக சென்று சில நாட்களுக்கு முன்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கே.பாலகிருஷ்ணன் 

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது 230 மெட்ரிக் டன் மட்டுமே தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தது. இப்போது ஆக்சிஜன் தயாரிப்பு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை. னவே, அந்த ஆலையை பூட்டி சீல் வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

51 mins ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

2 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

2 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

2 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

2 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

2 hours ago