இனி paytm,Gpay,தேவைப்படாது…வாட்ஸ்-அப்பில் கேஷ்பேக் வசதி அறிமுகம் …!

இனி paytm,Gpay,தேவைப்படாது…வாட்ஸ்-அப்பில் கேஷ்பேக் வசதி அறிமுகம் …!

வாட்ஸ்-அப் பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள பேடிஎம்,ஜி-பே,போன்-பே(paytm,Gpay,phonepe) போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,வாட்ஸ்-அப் நிறுவனமும் இந்திய பயனர்களுக்காக அதன் வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சத்தைச் சமீபத்தில் அறிமுகம் செய்தது

இந்நிலையில்,பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தைகைய புதிய வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சம் இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம்.

ஏனெனில்,வாட்ஸ்அப் பயனர்கள் இனி பணப்பரிமாற்றத்திற்கு என்று தனியாக ஒரு செயலியைத் டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.மாறாக,வாட்ஸ்-அப் மூலமாக பணம் செலுத்துதல் அல்லது பரிவர்த்தனைகளுக்கான சேவையை இனி பயனர்கள் கேஷ்பேக் சலுகையுடன் மேற்கொள்ள முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த கேஷ்பேக் இந்தியாவில் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கிடைக்கும்.மேலும்,வாட்ஸ்-அப் பேமண்ட் மூலம் ஒரு பணப்பரிவர்த்தனைக்கு ரூ.10 வரை கேஷ்பேக் வழங்கப்படலாம் என்று கண்காணிப்பு தளம் WABetaInfo கூறுகிறது.

மேலும்,இந்த கேஷ்பேக் அம்சம் தற்போதுள்ள வாட்ஸ்அப் பேமெண்ட் பயனர்களுக்கு வழங்கப்படுமா?அல்லது சேவையைப் பயன்படுத்தி முதல் பரிவர்த்தனை செய்தவர்களுக்கு வழங்கப்படுமா? என்பது குறித்து எந்த தகவலும் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube