இனிமேல் தண்ணீர் கிடையாது.! மாலை 6 மணியுடன் நீர் நிறுத்தம்.!

  • காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலையுடன் மேட்டூர்  அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது.
  • இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலை 6 மணியுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது.இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக  ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை நீர்  திறக்கப்படும்.

இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.கடந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் மாதத்தில் தண்ணீர்  திறந்து விடாமல் ஆகஸ்ட் 13-ம் தேதி திறந்து விடப்பட்டது.

பின்னர் பெய்த தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு 4 முறை முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan