இனி பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் கிடையாது – தமிழக அரசு

மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை, தலைமைச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் பள்ளி, கல்லுரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கபடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்