இனி ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிரடி ஆஃபர் கிடையாது – மத்திய அரசின் புதிய விதிகள்..!

இனி ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிரடி ஆஃபர் கிடையாது – மத்திய அரசின் புதிய விதிகள்..!

ஆன்லைனில் ஆஃபர் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபடும் செயல்களை தடுக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் மோசடி விற்பனைகளை தடுப்பதற்காக,மத்திய நுகர்வோர் விவகாரங்கள்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமானது,2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளில் பெரும் மாற்றங்களை செய்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.அதன்படி,

  • இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும்,கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கான ஊக்குவிப்புத் துறையில் (டிபிஐஐடி) பதிவு செய்ய வேண்டும்.
  • விசாரணை அல்லது பாதுகாப்பு அல்லது சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனத்துடன் வர்த்தக நிறுவனங்கள்,தங்களது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • நிறுவனங்கள் ஒரு குறை தீர்க்கும் அதிகாரி,ஒரு தலைமை அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும்.
  • இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் தண்டிக்கப்படும்.
  • டிஜிட்டல் தயாரிப்புகள் உட்பட டிஜிட்டல் அல்லது மின்னணு நெட்வொர்க்குகள் மூலம் வாங்கப்பட்ட அல்லது விற்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
  • எனினும்,ஆன்லைன் வர்த்தக தள்ளுபடி விற்பனைக்கு எந்த தடையும் இருக்காது.ஆனால்,வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை,அடிக்கடி அதிரடி ஆஃபர் (ஃபிளாஷ்) விற்பனை நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடையாது.
  • எனவே,இந்த திருத்தங்கள் குறித்து ஜூலை 6 ஆம் தேதிக்குள் பங்குதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு,கருத்துகளையும் பரிந்துரைகளை அனுப்பலாம்.”, என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Join our channel google news Youtube