அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி

நிவர் புயல் வந்த சமயத்தில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதனால் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடந்தன.இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.அரசும் புயல் வந்த சமயத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் ஏற்படவில்லை.நிவர் புயலால் பெருமளவு சேதம் ஏற்படாமல் தமிழக அரசு காத்துள்ளது.அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.நிவர் புயல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டையில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.சிறப்பான நடவடிக்கை எடுத்த ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

Join our channel google news Youtube