இனி இ-பாஸ் தேவையில்லை.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

இனி இ-பாஸ் தேவையில்லை.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

இனி இ-பாஸ் இன்றி எங்குனாலும் பயணிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளை அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 கட்டங்களாக பொதுமுடக்கம் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்துக்கு, சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை எனவும், பயணிக்க இ-பாஸ் தேவையில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Join our channel google news Youtube