H-1B விசாவுக்கு நேரடி நேர்காணல் இல்லை – அமெரிக்கா அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக H-1B, L-1 விசாக்களுக்கான நேர்காணல் இல்லை என அமெரிக்கா அறிவிப்பு.

அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “H-1B” விசா வழங்கி வருகிறது. அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணியில் நியமிக்கின்றனர்.

இந்த ‘H-1B’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த “H-1B” விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும்,  சீனர்களும் தான் பெற்று வருகின்றனர்.

இதன்பிறகு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “H-1B”விசாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், H-1B விசா மற்றும் (L-1, O-1) குடியுரிமைச்சாராத பிற விசாதாரர்களுக்கு நேரடி நேர்காணல் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா பதிவாகும் நிலையில், விசா நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மூன்றாவது ஆண்டாக நீடிப்பதால், விசா வழங்குவதை எளிதாக்க 2022-ஆம் ஆண்டில் சில பணி-விசா வகைகளுக்கான நேர்காணல் தற்காலிகமாக கைவிடுகிறது.

அதன்படி, வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிக்கும் H-1B, L-1 மற்றும் O-1 உள்ளிட்ட விசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள் அமெரிக்கத் தூதரகத்தில் நேரில் நேர்காணல் செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்