மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.” என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்து, பலருடைய விமர்சனத்திற்கு உள்ளானது. இவரது இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில், ” எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் பயங்கரவாதியாக இருந்தால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.