வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம் – மு.க.ஸ்டாலின் ட்வீட்

அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்தது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 முதல் 110 வரையும், சிறிய வெங்காயத்தின் விலை 120 இல் இருந்து 130 வரையும் விற்பனை செய்யப்பட்டது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தற்போது எடுத்தது.

ஆகவே  இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , வெங்காயம் கிலோ ரூ.130!நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், OnionPrice-ஆல் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு.வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்.வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை என்று தெரிவித்துள்ளார்.