10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் வரும் 17-ம் தேதி முதல் 1,6,9- ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளே இலவச பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்தார். அப்பொழுது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார்.