மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதையடுத்து, மாநிலங்களவை துணை தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையில் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அவையில் கடும் எதிர்ப்பு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து அவை கூடிய நிலையில், வேளாண் மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மாநிலங்களவையில் விவசாயிகள், வேளாண் விளைபொருட்கள் குறித்த சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதன்பின் மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வேளாண் மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதையடுத்து, எதிர் கட்சிகள் சார்பில் மாநிலங்களவை துணை தலைவருக்கு ஹரிவன்ஷ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் கடிதம் அழித்துள்ளதைத் தொடர்ந்து மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு நாளை இதுகுறித்து பரிசீலிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Latest Posts

குஜராத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்!
செய்த கொலையை மறைக்க தூக்க மாத்திரை கொடுத்து 9 பேரை கொலை செய்த கொடூரன்!
#BREAKING :"அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை'' - ரஜினிகாந்த் விளக்கம்
மாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்
பாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க?
#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்!
2021 - ல் "ருத்ரனாக" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....! #HappyBirthdayRaghavaLawrence
கேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை  7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு
பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி!
கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு