கொரோனா சூழல் காரணமாக இந்த ஆண்டு ரத யாத்திரை கிடையாது : ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்கள், கொரோனா  அச்சுறுத்தலால் ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தடை விதித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  ரதயாத்திரை அனுமதிக்காதது எனக்கு வேதனை அளிக்கிறது. ஆனால் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக பல பண்டிகைகளின் கொண்டாட்டத்தை தடுக்க வேண்டி இருக்கிறது. உங்கள் வீடுகளில் இருந்தே பாதுகாப்பான முறையில் ஜெகந்நாதனின் ஆசீர்வாதங்களை நாடுங்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.