#BREAKING: தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை.., சத்யபிரதா சாகு..!

தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார். 

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, ஒரு புறம் அனைத்து கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் அதிகாரிகள் நாள்தோறும் பணம், பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடையுடன் வாக்களிக்கலாம். கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும்  தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும்.

தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.  தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள்-3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர், பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம் உள்ளதாக  தெரிவித்தார்.

மேலும், 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 7,255 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 2,743 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். நேற்று வரை ரூ.231.63 கோடி பணம், பரிசுப் பொருட்களும், ரூ. 1.70 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

murugan

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

11 mins ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

58 mins ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

1 hour ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

1 hour ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

2 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

2 hours ago