எனக்கு பந்து வீசுவீர்களா? கேப்டனின் வேண்டுகோளை ஏற்க மறுத்த நியூஸிலாந்து வீரர்.. இதுதான் காரணம்!

எனக்கு பந்து வீசுவீர்களா? கேப்டனின் வேண்டுகோளை ஏற்க மறுத்த நியூஸிலாந்து வீரர்.. இதுதான் காரணம்!

பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, டியுக் பந்துகளை தனக்கு போடுவீர்களா? என்று நியூஸிலாந்து அணியின் ஜேமிசனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், வாய்ப்பே இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இடம் பிடித்துள்ளார். அவரை அந்த அணி, 15 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அதற்கேற்றாப்போல சிறப்பாக ஆடிவருகிறார். இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்தப்பின், இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் டியுக் பந்து பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பெங்களூர் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பயிற்சி மேற்கொண்டபோது கேப்டன் கோலி, டியுக் பந்துகளை தனக்கு போடுவீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு நியூஸிலாந்து அணியின் ஜேமிசன், வாய்ப்பே இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெங்களூர் அணியின் ஆல்-ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் கூறியதாவது, நாங்கள் நெட் பயிற்சிக்கு தயாராகி கொண்டிருந்தபோது கோலி, ஜேமிசன் டெஸ்ட் போட்டி பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது,

கோலி: ஜேமிசன், நீங்கள். டியுக் பந்தில் அதிகமாக பந்து வீசினீர்களா? (மேலும் பந்து குறித்து பேசிக் கொண்டனர்).

ஜேமிசன்: ஆம்.. நான் ஒன்றிரண்டு பந்துகள் கொண்டு வந்துள்ளேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இங்கிலாந்து செல்லும் முன் இங்கு பயிற்சி மேற்கொள்வேன்.

கோலி: அப்படியா.. வலைப்பயிற்சியில் எனக்கு பந்து வீச விரும்புவீர்களா? நான் உங்கள் பந்தை எதிர்கொள்ள மிகவும் மகிழ்ச்சியடைவேன்!

ஜேமிசன்: உங்களுக்கு நான் பவுலிங் செய்ய வாய்ப்பே இல்லை.. நான் பந்தை ரிலீஸ் செய்யும் இடத்தை நீங்கள் கவனித்து விடுவீர்கள். அதன்பின் எல்லாவற்றையும் டியுக் பந்தில் செய்து விடுவீர்கள். என்று பேசியதாக கிறிஸ்டியன் தெரிவித்தார்.

Join our channel google news Youtube