மூதாட்டி மீது வழக்கு இல்லை – காவல்துறை

மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம். 

அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில்,  கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார்.

அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கெட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த மூதாட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை  தரப்பில், மதுக்கரை காவல்நிலையத்தில் மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என அதிகார பூர்வமாக தெரிவிக்கிறேன்; பொய்யான தகவல் பரவி வருவது குறித்து விசாரணை நடத்தபடும். மூதாட்டியை சாட்சியாக மட்டுமே சேர்த்திருப்பதாக விளக்கப்பமளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment