பீர் தர மறுத்த நண்பர்களுக்கு கத்திகுத்து.! ஒருவர் உயிரிழப்பு.!

மும்பையில் பீர் தர மறுத்த நண்பர்களை கத்தியால் குத்திய கொலையாளியை, போலீசார்

By manikandan | Published: May 30, 2020 08:58 PM

மும்பையில் பீர் தர மறுத்த நண்பர்களை கத்தியால் குத்திய கொலையாளியை, போலீசார் சில மணிநேரத்தில் பிடித்தனர். கத்தி குத்தப்பட்ட நபர்களில் ஒருவர் உயிரிழந்தார்.  

மும்பையை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த அஜய் டிராவிட்டும் அவரது சகோதரன் விஜய் இருவரும் பீர் ஆர்டர் செய்து குடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சோனு என்ற அவர்களது நண்பர் வந்துள்ளார். 

அவர் அஜய் டிராவிட் மற்றும் விஜயிடம் பீர் கேட்டுள்ளார். அதற்கு இருவருமே தர மறுக்கவே கோபமடைந்த சோனு, அங்கிருந்த ஐஸ் வெட்டும் கத்தியை கொண்டுஅஜய் டிராவிட் மற்றும் விஜயை சரமாரியாக குத்தியுள்ளான். 

இதில் படுகாயமடைந்த இருவரும் சத்தம் எழுப்பவே, அங்கு அருகில் இருந்த நண்பர்கள் ஓடி வருவதை கண்டு, சோனு அங்கிருந்து தப்பிவிட்டான். இதில், அஜய் டிராவிட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சோனுவை போலீசார் கைது செய்தனர். 

Step2: Place in ads Display sections

unicc