#NivarCyclone : டாஸ்மாக் கடைகள் மூடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுப்பார்கள்!

டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது சம்பந்தமாக சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுப்பார்கள்.

நிவர் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, தஞ்சை, நாகை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாத நிலையில், தற்போது டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது சம்பந்தமாக சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவை கடைபிடிக்க மாவட்ட மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.